உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தேசிய அளவில் நெட்பால் போட்டி

Published On 2022-03-20 11:24 IST   |   Update On 2022-03-20 11:24:00 IST
தத்தனூர் எம்.ஆர்.சி.கல்லூரியில் தேசிய அளவில் நெட்பால் போட்டி நடைபெற்றது.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில்  தேசிய அளவிலான நெட்பால் போட்டிகள் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.

போட்டிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

எம்.ஆர்.சி. கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் தலைமையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், மகாராஷ்டிரா, பெங்களூர், ஆந்திரா, கர்நாடகா, விஜயவாடா, லக்னே , நிஜாம் பாத் உள்ளிட்ட 23 மாநிலங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. 

Similar News