உள்ளூர் செய்திகள்
காட்டாங்கொளத்தூர் அருகே குட்கா விற்ற பெண் கைது
காட்டாங்கொளத்தூர் அருகே குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் திருப்பாணாழ்வார் தெருவில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வதாக மறைமலைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்த்தபோது, திருப்பாணாழ்வார் தெருவில் வள்ளி (வயது 57) என்ற பெண் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 29 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.