உள்ளூர் செய்திகள்
கைது

கோஷ்டி மோதல்- கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 6 பேர் கைது

Published On 2022-03-19 16:10 IST   |   Update On 2022-03-19 16:10:00 IST
உளுந்தூர்பேட்டை அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் இரு தரப்பினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட கும்பலை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முன் விரோதம் காரணமாக ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தந்த புகாரின்பேரில் இம்தியாஸ், அப்துல்கனி, முஸ்தபா, தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல எதிர் தரப்பில் அப்துல்கனி கொடுத்த புகாரின்பேரில் கார்த்திகேயன், ஆறுமுகம், எழில், தமிழ்ச்செல்வன், சூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் இம்தியாஸ், அப்துல்கனி, ஆறுமுகம், எழில், தமிழ்ச்செல்வன், சூர்யா ஆகியோரை கைது செய்தனர். கைதான அப்துல்கனி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

Similar News