உள்ளூர் செய்திகள்
கைது

திருக்கோவிலூர் அருகே வழிப்பறி கொள்ளை- கும்பல் கைது

Published On 2022-03-19 15:50 IST   |   Update On 2022-03-19 15:50:00 IST
திருக்கோவிலூர் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூர் வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32) இவர் இரவு சுமார் 10 மணி அளவில் திருக்கோவிலூர் அருகே உள்ள சட கட்டி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென வெங்கடேசன் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு கத்தியைக் காட்டி அவரிடமிருந்த ரூபாய் ஆயிரம் பணம் மற்றும் செல்போனையும் பறித்து சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மணலூர்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வழிப்பறி சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பெங்களூர் ஜெய் நகரைச் சேர்ந்த சுனில் குமார் (21), இவரது தம்பி சுரேஷ் (19) மற்றும் திருக்கோவிலூர் போலீஸ் சரகம் கச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த  அரவிந்த் (20) ஆகியோர் என தெரியவந்தது.

அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் இரு சக்கர வாகனத்தில் தப்பிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைது செய்த நபர்களிடமிருந்து இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Similar News