உள்ளூர் செய்திகள்
ராஜபாளையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ராமலட்சுமி (வயது36). இவர்களுக்கு கவிதா (15) என்ற மகளும், கல்யாண்குமார் (12) என்ற மகனும் உள்ளனர்.
குடும்பதகராறு காரணமாக ராமலட்சுமி வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்தார். இதுகுறித்து அவரது தந்தை நாராயணன் புகாரின்பேரில் கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.