உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் ரேசன் கடை ஊழியர் பலி
சாலை விபத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பலியானார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது54). இவர் த.சோழங்குறிச்சி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சம்பவதன்று ரேஷன் கடையில் பணி முடிந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந் தார். உடையார் பாளையம் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ராஜேந்திரன் மொபட் மீது எதிரே சூரிய மணல் கிராமத்தை சேர்ந்த பாலு சாமி (45) ஓட்டி வந்த மொபட் மோதியது.
இதில் பலத்தகாயமடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டுஜெயங் கொண்டம் அரசு ஆஸ்பத்திரி க்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.