உள்ளூர் செய்திகள்
கோரிக்கைகளை மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

நாகர்கோவிலில் இன்று இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-18 09:25 GMT   |   Update On 2022-03-18 09:25 GMT
இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து குமரி மாவட்ட மீனவர் சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்:

இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து குமரி மாவட்ட மீனவர் சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

 இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மற்றும் கைது செய்வதை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி கலன்களை விடுதலை செய்ய வேண்டும். மீனவர் நல வாரியத்திற்கு தனி உதவி இயக்குனர் அமைத்திட வேண்டும். உள்நாட்டு மீனவர்களுக்கு தனி உதவி இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் பிராந்திய இயக்குனரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

சவுதி அரேபியா,  குவைத் நாடுகளில் கடல் தொழில் செய்யும் தமிழக மீனவர்களை கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாத்திட வேண்டும். கடலில் வழிதவறி அன்னிய நாட்டு தீவுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட அனைத்து மீனவ இயக்கங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன் தலைமை தாங்கினார். மாவட்ட மீன்பிடி தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி ஜெலஸ்டின், தமிழ்நாடு மீன்பிடி தேசிய கூட்டமைப்பு நிர்வாகி அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் விசைப் படகுகள் மீன்பிடி நலச்சங்கம், கடலோர உள்ளாட்சி கூட்டமைப்பு, மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு, மாவட்ட  தொழிலாளர் சங்கம், தேசிய மீனவர் முன்னேற்ற இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
Tags:    

Similar News