உள்ளூர் செய்திகள்
தாளவாடி மாரியம்மன் கோவில் முகப்பு தோற்றம்

தாளவாடி மாரியம்மன் கோவிலில் நாளை குண்டம் விழா

Published On 2022-03-16 15:10 IST   |   Update On 2022-03-16 15:10:00 IST
தாளவாடி பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் குண்டம் விழா நாளை நடக்கிறது.

தாளவாடி:

தாளவாடி பிரசித்தி பெற்ற  மாரியம்மன் கோவில் குண்டம் விழா நாளை நடக்கிறது.

ஈரோடு மாவட்டம் தாள வாடியில்   பிரசித்தி பெற்ற  மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் விழா நடந்து வருகிறது.

இந்தாண்டுக்கான குண்டம் திருவிழா பூச்சாட்டு தலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம்  விழா நாளை (வியாழக் கிழமை) காலை நடக்கிறது. இதை யொட்டி இன்று இரவு குண்டம் வார்க்கப்படுகிறது.
விழாவை யொட்டி குண்டம் வளர்ப்பதற்கு தேவையான விறகுகள் கொண்டு வரப்பட்டது. இதற்காக 25-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில்  சென்று விறகு எடுத்து வரபட்டது.

கோவில் பூசாரி ஒருவர் மட்டுமே  குண்டம் இறங்குவார். இந்த குண்டம் திருவிழாவை காண தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதற்காக பலர் தாளவாடி பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தாளவாடி முழு வதும் விழா கோலமாக காட்சி அளிக்கிறது.

மேலும்  சத்திய மங்கலம், கோபி செட்டிபாளையம், சாம்ராஜ்நகர், மைசூர் ஆகிய   பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குண்டம் விழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவார்கள். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதி செய்யபட்டு உள்ளது.

Similar News