உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கீழ்பவானி பாசன நீர் சங்கத்துக்கு தேர்தல் 26-ந் தேதி முடிவுகள் அறிவிப்பு

Published On 2022-03-16 14:55 IST   |   Update On 2022-03-16 14:55:00 IST
கீழ்பவானி பாசன நீர்சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

கீழ்பவானி பாசன நீர்சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட கீழ்பவானி வடிநில கோட்டம், பவானிசாகர் அணை கோட்டங்களுக்கு உட்பட்ட நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தல் நடக்கும் பகுதியில் நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தலைவர், மண்டல தொகுதிகளுக்கு வேட்பு மனு படிவங்கள் சம் மந்தப்பட்ட தாசில்தாரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
இதன்படி, அணைக்கட்டு நீரை பயன்படுத்துவோர் சங்கங்களில் ஒரு தலைவர், 4 ஆட்சி மண்டல தொகுதி என சத்தியமங்கலம் தாலுகாவில் 190ஏ செண்பகப்புதூர், 49ஏ பழையகளையனூர், 115 உக்கரம், 208 உக்கரம், வரதம்பாளையம், கணுவாய் கோம்பைபள்ளம் ஏரி, கோவில் புதூர்.
நம்பியூர் தாலுகாவில் 267 எலத்தூர், 311 எலத்தூர், 175 கரட்டுப்பாளையம், 415 கரட்டுப்பாளையம், 16 குருமந்தூர், மொட்டணம், வேமாண்டபாளையம் ஏரி, கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் 454 அளுக்குளி, 314 கலிங்கியம், 94 கடுக்காம்பாளையம், 337 பாண்டியம்பாளையம், குண்டேரிப்பள்ளம், கொளப்பலூர், சஞ்சீவராயன் ஏரி ஆகிய சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
பவானி தாலுகாவில், 267 நல்லாம்பட்டி, 341 சலங்கபாளையம், 894 சலங்கபாளையம், 22 ஏ சந்திராபுரம், ஆலத்தூர், பெரியபுலியூர், ஆப்பக் கூடல் ஏரி, அனந்தசாகரம் ஏரி, அந்தியூர் தாலுகாவில் கெட்டிசமுத்திரம், அந்தியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி, வேம்பத்தி ஏரி, வரட்டுப்பள்ளம் அணை. 
ஈரோடு தாலுகாவில் காஞ்சிகோவில் முள்ளம் பட்டி, ரங்கன்பள்ளம், மொடக்குறிச்சி தாலுகாவில் பெரும்பள்ளம், குரங்கன் பள்ளம், அவல்பூந்துறை, குலவிளக்கு, கொடுமுடி தாலுகாவில் அஞ்சூர் ஆகிய சங்கங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனுக்கள் வரும் 18-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம். மனுக்களை கூர்ந்தாய்வு செய்தல், செல் திறனுள்ள வேட்பு மனுக்களின் பட்டியல் வரும் 21-ந் தேதி காலை 9 மணி முதல் 2  மணிக்குள் வெளியிடப்படும்.
வேட்பு மனுக்களை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிக்குள் திரும்ப பெறலாம். 
அன்று மாலை 4 மணி மேல் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும். இந்த வேட்பாளர்களுக்கான தேர்தல் வரும் 26-ந் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தி, மாலை 4  மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவு அறிவிக்கப்படும்.

Similar News