உள்ளூர் செய்திகள்
வாலாஜாவில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்
வாலாஜாவில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ விழாவில் 8-ம் தேதி விக்னேஸ்வரர் மூஷிக வாகனம் 9-ம் தேதி அன்னவாகனம் 10-ம் தேதி சிம்மவாகனம் 11-ம் தேதி கற்பகவிருட்சம் காமதேனு வாகன சேவை, 12ம் தேரி நாக வாகனம், 13ம் தேதி திருகல்யாண ரிஷப வாகனம், 14ம் தேதி நேற்று யானை வாகனம் போன்ற வாகனங்கள் வீதி உலா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தேர்த்திருவிழானது இன்று தொடங்கியது. ஏகாம்பரநாதர் கோவில் தேரடியிலிருந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
வாலாஜா எம்.பி.டி சாலையில் தேர் நிறுத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் மீண்டும் தேர் புறப்பட்டு வாலாஜா பேருந்து நிலையம் வழியாக சோளிங்கர் ரோடு மஞ்சள் காமாலை மருந்து வழங்கும் வீதி வழியாக தேர் நிலையத்தை வந்தடைந்தது.