உள்ளூர் செய்திகள்
காவேரிப்பாக்கத்தில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்கள் ஊர்வலம்
காவேரிப்பாக்கம் அருகே மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்கள் ஊர்வலம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ மாணவிகள் ஊர்வலம் சென்றனர்.
இதில் தொன்போஸ்கோ வேளாண்மை கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களுடன் இணைந்து தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் நடத்தினர்.
நெகிழிப் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர்.