உள்ளூர் செய்திகள்
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய காட்சி

பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-03-15 15:22 IST   |   Update On 2022-03-15 15:22:00 IST
கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
கோபி

கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 

கடைக்காரர்கள் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் ஜானகிராமன் அடங்கிய குழுவினர்  பஸ் நிலையத்திற்கு திடீரென வந்து சோதனை நடத்தினர். 

அப்போது கடையின் முன் வைத்திருந்த பழக்கூடைகள், மேடை போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றினர். வணிக வளாக கடைகள் இரும்பு ஷட்டர் பகுதியிலிருந்து 5 அடி இடைவெளிக்குள் பயன்படுத்திக்கொள்ள வசதியாக எல்லை கோடும் போட்டனர். 

இதைத்தாண்டி பொருட்கள் வந்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Similar News