உள்ளூர் செய்திகள்
கொங்கஹள்ளி ஸ்ரீமல்லிகார்ஜூனா கோவிலில் பூசாரி குண்டம் இறங்கினார்.

கொங்கஹள்ளி மல்லிகார்ஜூனா கோவில் குண்டம் விழா

Published On 2022-03-15 14:43 IST   |   Update On 2022-03-15 14:43:00 IST
தாளவாடி அடுத்துள்ள கொங்கஹள்ளி என்ற வனத்தில் 3 மலைகளுக்கு நடுவே பாறை குகையில் ஸ்ரீ மல்லிகார்ஜூன சாமி கோவில் அமைந்துள்ளது. லிங்காயத்து பழங்குடியின இன மக்களுக்கு சொந்தமான இக்கோவிலில் 18 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில் குண்டம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
தாளவாடி:

தாளவாடி அடுத்துள்ள கொங்கஹள்ளி என்ற வனத்தில் 3 மலைகளுக்கு நடுவே பாறை குகையில் ஸ்ரீ  மல்லிகார்ஜூன சாமி கோவில்  அமைந்துள்ளது. லிங்காயத்து பழங்குடியின இன மக்களுக்கு சொந்தமான இக்கோவிலில் 18 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள்  சார்பில் குண்டம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. 

நேற்று மாலை ருத்திரா ப்பிஷேக பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கிரிஜம்மன் நந்தவனத்தோப்பில் இருந்து மேள தாளத்துடன் சுவாமி  ஆபரணங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 

இக்கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பது ஐதீகம் என்பதால் பெண்கள் 2 கிமீ தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாறை குகையில் சுயம்புவாக லிங்கம் நிலை கொண்டுள்ளதால் லிங்கதுக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து   மல்லிகார்ஜூன சாமிக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ வார்க் கப்பட்டு மலர்கள் தூவப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆராவாரத்துடன் பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார். பூசாரியை தவிர பக்தர்கள் யாரும் குண்டம் இறங்கக்கூடாது என்பது ஐதீகம் என்பதல் ஆண் பக்தர்கள் குண்டத்தை தொட்டு வழிபட்டனர். 

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் மல்லிகார் ஜூன சாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். முனிவர் அவதாரத்தில் வந்த சாமியை பெண்கள் ஊருக்கு வெளியே உள்ள  கிரிஜம்மா நந்தனத்தோப்பில் நின்று வந்து வழிபட்டனர்.   அதனைத்தொடர்ந்து அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News