உள்ளூர் செய்திகள்
சிறப்பு தபால் தலையை இந்திய அஞ்சல் துறையின் வெளியிட்ட காட்சி.

அரக்கோணம் என்எஸ் ராஜாளி படைதள 30-ம் ஆண்டு நிறைவு விழா

Published On 2022-03-14 15:15 IST   |   Update On 2022-03-14 15:15:00 IST
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி படைதள 30-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
அரக்கோணம்:

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியின் 30-ம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், “கடல் கண்காணிப்பு பணியில் கடற்படை விமானப்பிரிவின் சுயசார்பு” குறித்து 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. 

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளியில் நீண்ட தூர கடல்சார் உளவு விமானப் படை மற்றும் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி ஆகியன இயங்கி வருகின்றன.

இந்த விமான நிலையம் அதிநவீன போயிங் பி81, சீ கார்டியன் ஹை ஆல்டி டியூட் லாங் ரேஞ்ச் தொலைதூர பைலட்டட் விமானம் மற்றும் சேடக் ஹெலிகாப்டர்களை இயக்கும் தனிச்சிறப்பைக் கொண்டுள்ளதை குறிப்பிட்டனர்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் ‘கடல்சார் கண்காணிப்பில் 3 தசாப்தங்களின் சிறப்பு’ என்ற சிறப்பு அஞ்சல் அட்டையை இந்திய நேவல் அகாடெமியின் கமாண்டன்ட் வைஸ் அட்மிரல் புனீத் குமார் பாஹல் வெளியிட்டார். 

அப்போது இந்திய அஞ்சல் துறையின் சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் உடன் இருந்தனர்.

இந்திய அரசின் ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை விமான பிரிவு சுய சார்பை அடைய பொது-தனியார் கூட்டாண்மை அவசியம்.கடல்சார் கண்காணிப்பு விமானங்களுக்கான பராமரிப்பு, பழுது பார்ப்பு, 

மறுசீரமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிகள் உள்ளிட்ட 15 கட்டுரைகள் இந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டன.

Similar News