உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பள்ளூர், தக்கோலம் பகுதியில் நாளை மின் தடை

Published On 2022-03-14 15:14 IST   |   Update On 2022-03-14 15:14:00 IST
பள்ளூர், தக்கோலம் பகுதியில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம்:

அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை நிலையங்களின்  மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.-  

பள்ளூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளூர், கம்மாவார்பாளையம், கோவிந்தவாடி, அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 

தக்கோலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தக்கோலம், சிஐஎஸ்எப், அரிகிலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம்,அனந்தபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.  

புன்னை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூர், எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம், வேட்டாங்குளம், மேலேரி,சிறுணமல்லி, சம்பந்தராயன்பேட்டை மற்றும் சுற்றியுள்ள அதனை சுற்றியுள்ள பகுதிகள். 

இவ்வாறு கோட்ட செயற் பொறியாளர் எஸ். கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News