உள்ளூர் செய்திகள்
முன்னாள் ராணுவ வீரர் லீக் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தபடம்.

முன்னாள் ராணுவ வீரர் லீக் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

Published On 2022-03-14 10:01 IST   |   Update On 2022-03-14 10:01:00 IST
முன்னாள் ராணுவ வீரர் லீக் சார்பில் கருத்து பரிமாற்றம்-கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை மிகவும் எளிமையான முறையில் அளித்திட ஸ்பர்ஸ் என்ற என்ற எளிய முறையினை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 

இதனைப்பற்றிய கருத்து பரிமாற்றம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுவை  முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் சார்பில் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் செயலாளர் லெப்டிணன்ட் சுகுமார், ஸ்பர்ஸ் பற்றி விளக்க உரை ஆற்றினார். கூட்டத்திற்கு லீக்கின் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் சிவராமன்,  பொதுச் செயலாளர் செல்வமணி, செயலாளர் தௌமினிக் மற்றும் பொருளாளர் ராமமூர்த்தி உள்பட 150 முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

Similar News