உள்ளூர் செய்திகள்
கலைவாணர் நகரில் உள்ள ஜோஜ் பேட்மிண்டன் அகாடமியில் பேட்மிண்டன் போட்டி நடந்த காட்சி.

மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி

Published On 2022-03-13 14:35 IST   |   Update On 2022-03-13 14:35:00 IST
புதுவை மாஸ்டர்ஸ் பேட் மிண்டன் சங்கம் சார்பில் மாநில அளவிலான பேட் மிண்டன் போட்டி நடந்தது.
புதுச்சேரி:

புதுவை மாஸ்டர்ஸ் பேட் மிண்டன் சங்கம் சார்பில் மாநில அளவிலான பேட் மிண்டன் போட்டி கோரிமேடு கலைவாணர் நகரில் உள்ள ஜோஸ் பேட் மிண்டன் அகாடமியில் 2 நாட்கள் நடக்கிறது.  இதன் தொடக்க விழா நடந்தது.

விழாவில் ஜிப்மர் மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் படே,  இந்திய விளை யாட்டு ஆணைய புதுவை முன்னாள் பொறுப்பாளர் முத்துகேசவலு ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். 

இதில் புதுவை மாஸ்டர்ஸ் பேட் மிண்டன் சங்க தலைவர் தாமஸ், செயலாளர் ஹென்றி தாமஸ், பொருளாளர் உமா சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் 48 விளையாட்டு கிளப்புகளை சேர்ந்த 232 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர் களில் 40 பேர் பெண்கள் ஆவர். போட்டிகள் ஒற்றையர்,  இரட்டையர், கலப்பு இரட்டையர் என தனித்தனி பிரிவுகளாக நடந்து வருகிறது.

நேற்று 164 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு 124 போட்டிகள் நடத்தப் பட்டன. கால் இறுதி போட்டிகளில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஸ்டாலின், பிஜூ ஆகியோரும், அன்பழகன், பாரதிதாசன் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். 

55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் போலீஸ் ஐ.ஜி. சந்திரன், ராஜ்குமார் ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட் டோருக்கான தனிநபர் பிரிவில் ஜிப்மர் மருத்துவ  மனையின் முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் படே தேர்வாகி யுள்ளார். 

65 வயதுக்கு மேற்பட் டோருக்கான போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் டாக்டர் ஜம்பு லிங்கம், நடராஜன் ஜோடி தகுதி பெற்றுள்ளது.

போட்டிகள் இன்று  (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.   இன்று மாலை இறுதி போட்டிகள் நடக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன், போலீஸ் ஐ.ஜி. சந்திரன், டாக்டர் ஜம்பு லிங்கம் ஆகியோர் பரிசுகளை வழங்குகிறார்கள்.

Similar News