உள்ளூர் செய்திகள்
சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியரை பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் லூர்துசாமி பாராட்டி வாழ்த்துக்களை த

அமலோற்பவம் லூர்து பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-03-13 14:32 IST   |   Update On 2022-03-13 14:32:00 IST
புதுவை அமலோற்பவம் லூர்து அகாடமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரி:

விப்ரோ எர்த்தியன் நிறுவனம் சார்பில் செயல் வழி கற்றல் நிகழ்ச்சியாக பல்லுயிர் மற்றும் நிலைத் தன்மை என்ற தலைப்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய படைப்புகள் வெளியிடப்பட்டன. 

இதில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுவை அமலோற்பவம் லூர்து அகாடமி (சி.பி.எஸ்.இ.) பள்ளி 7-ம் வகுப்பு மாணவிகள் லூர்து அருமை பர்னிஸ், சங்கீதா, 8-ம் வகுப்பு மாணவி லத்திகா, 9-ம் வகுப்பு மாணவர்கள்  அஷிபா, பூவராகவன், பல்லுயிர் மற்றும் நிலைத்தன்மை என்ற தலைப்பில் ஆய்வுகளை சமர்பித்தனர். 

மேலும் இவர்கள் கோவில் காடுகள் பற்றிய தகவல்கள் மற்றும் இன்றைய சூழ்நிலையில் அதன் முக்கியத்துவம் பற்றி செய்திகளை தொகுத்து சமர்பித்தனர். ஆய்வின் அடிப்படையில் சிறந்த படைப்புகளுக்காக புதுவை மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட 5 படைப்புகளில் ஒன் றாக அமலோற்பவம் லூர்து அகாடமி தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியரை பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் லூர்துசாமி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.-

Similar News