உள்ளூர் செய்திகள்
உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்த காட்சி.

உடன்குடி யூனியனில் சேதமான சாலைகளை புதுப்பிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை

Published On 2022-03-12 16:19 IST   |   Update On 2022-03-12 16:19:00 IST
உடன்குடி யூனியனில் உள்ள சேதமான சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
உடன்குடி:

உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் சாதாரணக் கூட்டம் யூனியன் தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில் நடந்தது. யூனியன் துணைத் தலைவர் மீரா சிராஜூதீன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், பொற்செழியன் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சியின் செலவினங்கள், திட்டங்கள் குறித்த 38 தீர்மானங்களை இளநிலை உதவியாளர் அந்தோணி மிக்கேல்ராஜ் வாசிக்க ஏகமன தாக நிறைவேற்றப்பட்டது.

ஓன்றியக்குழு உறுப்பினர்கள் த. மகாராஜா, செந்தில் ஆகியோர் பேசும்போது, செட்டியாபத்து அருணாச்சலபுரம் சாலை, தைக்காவூர், பிச்சிவிளை சாலை, சீர்காட்சிதண்டுபத்து சாலை, விஜயநாராயணபுரம்நயினார் புரம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இச்சாலைகளை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

உறுப்பினர் ராமலட்சுமி பேசும்போது, பரமன்குறிச்சி அபர்ணா பள்ளி அருகில், அரங்கன்விளை கிழக்குத் தெருவி அலங்கார தளக்கல் அமைக்க வேண்டும், முந்திரித்தோட்டம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும், 

கரிசன்விளை இசக்கியம்மன் கோவில் தெருவில் தார்ச்சாலை அமைக்க வேண்டும், முருகேசபுரம் நெசவாளர் தெருவில் சிறுமின்விசை நீர்த்தொட்டியும், வீரப்பநாடார்குடியிருப்பில் சுகாதார வளாகமும் அமைக்க வேண்டும் என்றார்.

முன்னதாக உடன்குடி பேரூராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Similar News