உள்ளூர் செய்திகள்
434 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
ஈரோட்டில் இன்று 434 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று 434 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுகாதா ரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன்படி வாரந்தோறும் சனிக்கிழமை மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடத்தப் பட்டு வருகிறது. இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் காலை 9 மணி முதல் தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 434 மையங் களில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோர், முன் களப்பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இது தவிர 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் இன்று 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.
இதில் 66 வாகனங்கள், 1,736 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.