உள்ளூர் செய்திகள்
இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்குபயிற்சி கையேடு வழங்கப்பட்டது.

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Published On 2022-03-11 15:21 IST   |   Update On 2022-03-11 15:21:00 IST
மொடக்குறிச்சி ஒன்றிய த்தில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி ஒன்றிய த்தில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வடுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். 

இதில் இல்லம் தேடி கல்வி பயிற்சியின் மறுசீரமைப்பு, குழந்தை களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களின் கடமைகள், பொறுப்புகள், பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 16 பள்ளிகளை சேர்ந்த பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

மேலும்  50&க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆசிரியர்கள் மாணிக்கராஜ், சுமித்ராதேவி உள்பட பயிற்றுநர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். 

இதேபோல் லக்காபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிற்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News