உள்ளூர் செய்திகள்
434 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோட்டில் நாளை 434 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் நாளை 434 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.
.
.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 434 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2&ம் தவணை தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோர், முன் களப் பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும்.
இது தவிர 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் வகை தடுப்பூசி முதல் மற்றும் 2&ம் தவணை செலுத்தப்படும்.
மொத்தம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, 66 வாகனங்கள் 1,736 பணியா ளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.