உள்ளூர் செய்திகள்
ஒசூரில் துணிகரம் பீரோக்களை உடைத்து 13 பவுன் நகை கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பீரோக்களை உடைத்து 13 பவுன் நகையை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், அரசனட்டி பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது58). சம்பவத்தன்று இரவு, இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மேல்தளத்தில் தூங்க சென்றுவிட்டார்.
நேற்று காலை முரளிதரன் எழுந்து பார்த்த போது, தன் வீட்டின் முன்கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று அறைகளை பார்த்தார்.
அப்போது, கீழ் தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள அறைகளில் இருந்த பீரோவை உடைத்து மர்ம நபர்கள் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதை தெரியவந்தது.
இது குறித்து, அவர் சிப்காட் போலீசில் புகார் கொடுத் தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.