உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பண்ணாரியம்மன் திருவீதி உலா

Published On 2022-03-10 15:54 IST   |   Update On 2022-03-10 15:54:00 IST
சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி திருவீதி உலா நடைபெற்றது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி திருவீதி உலா நடைபெற்றது.

சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 8&ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து அன்று இரவு அம்மன் சப்பரம் சிக்கரசம் பாளையத்தில் எழுந்தருளியது. பின்னர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் அம்மன் சப்பரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நேற்று காலை சிக்கரசம் பாளைத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து இரவு புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மன் சப்பரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) புதூர் கிராமத்தில் இருந்து புறப்பட்டு அம்மன் சப்பரம் மதியம் வெள்ளியம்பாளையம் கிராமத்திற்கு வந்தடைந்து அங்கு திருவீதி உலா நடைபெற்றது. கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தயிர்பள்ளம், நெரிஞ்சிபேட்டை, கொத்தமங்கலம், பழைய கொத்தமங்கலம் (பரிசல்துறை), பகுடுதுறை, முடுக்கன் துறை வழியாக  வந்து இரவு 8 மணிக்கு தொட்டம்பாளையம் சென்றடைந்து அங்குள்ள அரங்கநாதர் கோவிலில் அம்மன் சப்பரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதனைத்தொடந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை தொட்டம்பாளையம் கிராமத்தில் திருவீதி உலா நடைபெறும்.

Similar News