உள்ளூர் செய்திகள்
மகளிர்தின வாழ்த்து

பெண் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளி மாணவிகள்

Published On 2022-03-10 15:31 IST   |   Update On 2022-03-10 15:31:00 IST
உலக மகளிர் தினத்தையொட்டி ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் பெண் போலீசாருக்கு, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ராஜபாளையம் 

ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. சத்யா குழுமங்களின் நிர்வாகி குமரேசன் தலைமை வகித்தார். துணை நிர்வாகி அரவிந்த் முன்னிலை வகித்தார். 
 
பள்ளி மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ராகுமரேசன், டாக்டர் மோனிஷா, நிர்வாக அதிகாரி அமுதா, பள்ளி ஆலோசகர் பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாணவர் கவிவர்ஷன் வரவேற்றார். மாணவி தீபாஸ்ரீ தொகுத்து வழங்கினார். மாணவி ரக்ஷனா கவிதை படித்தார்.  

அபர்ணாஸ்ரீ சொற்பொழிவாற்றினார். விழாவின் முத்தாய்ப்பாக ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்ற மாணவ&மாணவிகள் ஆய்வாளர் மரியபாக்யம் உள்ளிட்ட காவல்துறை பெண் அதிகாரிகளுக்கு மலர்கொத்து கொடுத்து மகளிர்தின வாழ்த்துக்களைகூறி திகைப்பில் ஆழ்த்தினர். 

அதைத்தொடர்ந்து அரவிந்த் மருத்துவமனையில் டாக்டர் சித்ராகுமரேசன், ரோட்டரி சங்க தலைவி டாக்டர் ராதா, நகராட்சி ஆணையாளர் சுந்தரம்மாள், டைகர் பர்னிச்சர் உரிமையாளர் ஹமிதாபீவி ஆகியோரை சந்தித்து வாழ்த்துக் கூறினர். மாணவி மதுஸ்ரீ நன்றி கூறினார்.

Similar News