உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அங்காளபரமேஸ்வரி கோவில் குண்டம் விழா

Published On 2022-03-10 15:29 IST   |   Update On 2022-03-10 15:29:00 IST
ஈரோடு அங்காளபரமேஸ்வரி கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
ஈரோடு, மார்ச்:

ஈரோடு அங்காளபரமேஸ்வரி கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்

ஈரோடு கீரக்காரவீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 8-ந் தேதி அக்னி கபாலம் நிகழ்ச்சியும், அம்மனுக்கு வெண்ணெய் காப்பு அலங்காரமும் நடப்பது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு குண்டம் பூ போடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு நடந்தது. முதலில் கோவிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கிய தொடங்கி வைத்தார்.  அதனைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள்  தீ மிதித்து  தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

திருவிழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை அங்காள பரமேஸ்வரிக்கு மாவிளக்கு படைத்தல், இரவு திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை காலை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Similar News