உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கலை விருது பெற கலைஞர்களுக்கு அழைப்பு

Published On 2022-03-10 15:16 IST   |   Update On 2022-03-10 15:16:00 IST
கலைவிருது பெற தகுதியுள்ள கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அரியலூர் :

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இயல், இசைமற்றும் நாடகம் முதலிய கலைகளில் ஒன்று  அல்லது  ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும்   15  கலைஞர்க ளுக்கு வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர் வாளர் குழு விரைவில் கூட்டப்படவுள்ளது.

ஆகவே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம்,  ஓவியம், கும்மி கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகாட் டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட் டம்,  கோல்கால் ஆட்டம், கலியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஆழியாட்டம், 

கைச் சிலம்பாட்டம் (வீரக் கலை), மற்றும் இசைக்கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக்கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலை களில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  
    
18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19&35 வயதுக்குட்பட்ட  கலைஞர்களுக்கு கலை   வளர்மணி விருதும், 36&50 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி  விருதும், 51&65 வயதுக்குட்பட்ட கலை ஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 66 வயது அதற்கு மேற்பட்ட வயதுடைய கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும்  வழங்கப்படவுள்ளது.

எனவே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயது சான்று மற்றும் கலைத் தொடர்பான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்டக் கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள்  விண்ணப்பிக்க கூடாது.

விண்ணப்பங்கள் 25&ந் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை  பண்பாட்டு  மையம், நைட்  சாயில்  டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி&06 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News