உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி பயிற்சி

Published On 2022-03-10 15:02 IST   |   Update On 2022-03-10 15:02:00 IST
விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி குறித்து பயிற்சி நடைபெற்றது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் கிராமத்தில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட வேளாண் துணை இயக்குநர் பழனிச்சாமி தலைமை வகித்து, உளுந்து சாகுபடி செய்வதன் அவசியம்,  அதன் பயன்பாடு, மண்ணிண் மேலாண்மை குறித்து பேசினார்.

வேளாண் உதவி இயக்குநர் ஜென்சி முன்னிலை வகித்து, வேளாண் துறையால் வழங்கப்படும் உளுந்து பயிருக்கான மானியம், திரவ உயிர் உரங்களின் பயன்பாடுகள், பயறு வகை நுண்ணூட்டம் பற்றி எடுத்து கூறினார்.

இந்த பயிற்சியில் தளவாய் பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் ஆனந்தி, ஒளிச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்

Similar News