உள்ளூர் செய்திகள்
சிறுமி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் கைது
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடு படுத்திய வழக்கில் தலை மறைவாக இருந்த மேலும் ஒரு பெண் செவ்வாய்க் கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா (28), கீழப்பழுவூர் சந்திரா, ராஜேந்திரன் (62), தஞ்சை வினோத் (29), வி.கைகாட்டி பிரேம் (29), பாலச்சந்திரன் (27), செந்துறை தனவேல் (45), வெற்றிச்செல்வன் (37), திருமானூர் தெய்வீகன் (44) ஆகிய 9 பேரை ஜெயங் கொண்டம் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அமிர்தராயன் கோட்டையைச் சேர்ந்த நாகராஜ் மனைவி இந்திரா (40) என்பவரை செவ்வாய்க் கிழமை இரவு கைது செய்த காவல் துறையினர், மேலும் இந்த வழக்கு தொடர்பாக தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் பாலாஜி உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.