உள்ளூர் செய்திகள்
மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

Published On 2022-03-10 14:56 IST   |   Update On 2022-03-10 14:56:00 IST
அரியலூர் அருகே பேருந்து நிறுத்ததில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்:

அரியலூர் அருகே பேருந்து நிறுத்ததில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் அடுத்த பெரியநாகலூர், சின்னநாகலூர், புள்ளிகுளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அஸ்தினாபுரத்திலுள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள், பெரியநாகலூர் பேருந்து நிறுத்ததில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை பெரியநாகலூர் பேருந்து நிறுத்ததில் எந்த அரசுப் பேருந்துகளும் நிற்கவில்லை. இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டிருந்த மாணவ, மாணவிகள் ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கயர்லாபாத் காவல் துறையினர், சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கூறி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தையடுத்து மாணவர்கள் கலைந்துச் சென்றனர். இதனால் வி.கைகாட்டி&அரியலூர் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News