உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான அருண்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரைவர் பலி

Published On 2022-03-10 14:52 IST   |   Update On 2022-03-10 14:52:00 IST
பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:

பவானி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி அடுத்து மயிலம்பாடி வாய்க்கால் பாளையம், மேல் காலனி பகுதியை சேர்ந்தவர் அருண் (25). ஆட்டோ டிரைவர். 

இவருடைய மனைவி வசந்தி. சம்பவத்தன்று அருண் இரவு 10 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் மயிலம்பாடியில் இருந்து கண்ணாடி பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அருண் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  இதில் அருக்கு தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அருன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானி இன்ஸ்பெகடர் பொன்னம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Similar News