உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கூட்டுறவு துப்புரவு பணியை நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் சுகாதார பிரிவு சார்பில் நகரில் உள்ள 33வார்டுகளில் காலை 6மணி முதல் மதியம் ஒரு மணி வரை இடைவிடாமல் நகராட்சி துப்புரவு ஊழியர்களால் சுத்தம் செய்யும் கூட்டு துப்புரவு பணி தொடக்கவிழா நடந்தது. 5வது வார்டு அய்யம்பட்டி தெருவில் நகர்மன்றதலைவர் தங்கம் ரவி கண்ணன் இந்தப்பணிகளை தொடங்கி வைத்தார். ஆணையாளர் மல்லிகா முன்னிலை வகித்தார்.
இதில் தலைவர் தங்கம்ரவிகண்ணன் பேசுகையில், சுகாதாரம் மிகவும் முக்கியமானது. பொதுமக்களாகிய நீங்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அதேபோல் அவர்களும் சிறந்தமுறையில் பணியாற்றுவார்கள் சுகாதாரம் நன்றாக இருந்தால்தான் வாழ்வு சிறக்கும் இதனை கருத்தில் கொண்டு நமது வீட்டையும் தெருக்களையும் சுற்றுப்புறங்களையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ் ,சந்திரா, ஜஹாங்கீர் சுகாதார உதவியாளர் மோசஸ், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் மாடசாமி, மாரியப்பன், ஜான், அய்யம்பட்டி சமுதாய நிர்வாகிகள் கவிமோகன், பரமன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் கூட்டுதுப்புரவுபணி நடைபெறும் என்று நகர்மன்றத்தலைவர்ரவிகண்ணன், துணைத்தலைவர் செல்வமணி, ஆணையாளர் மல்லிகா ஆகியோர் தெரிவித்தனர்.