உள்ளூர் செய்திகள்
.

வைக்கோல் பாரம் ஏற்றி வந்த போது டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

Published On 2022-03-09 16:14 IST   |   Update On 2022-03-09 16:14:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வைக்கோல் பாரம் ஏற்றி வந்த போது டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னப்பள்ளி அருகே கரனாகப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா (எ) குண்டப்பா. இவரது மகன் தினேஷ்குமார் (வயது17). டிராக்டர் டிரைவரான இவரும், காமன் தொட்டியை சேர்ந்த பெரியசாமி (30) உள்பட 3 பேரும் நேற்றுமாலை வைக்கோல் பாரம் ஏற்றி கொண்டு சூளகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

அப்போது மருதாண்டப்பள்ளி அருகே வந்த போது டிராக்டர் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி தினேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News