உள்ளூர் செய்திகள்
வேதாரண்யம் உட்கோட்டத்தை சேர்ந்த பெண் போலீசார் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் உட்கோட்டத்தை சேர்ந்த பெண் போலீசார் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் காவல் துணை காண்காணிப்பார் முருகவேல் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கோட்டாட் சியார் துரைமுருகன், தாசில்தார் ரவிச்சந்திரன், துணை தாசில்தார் வேதையன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி துணைத்தலைவர் மங்களநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி வேதாரண்யம் சரகத்தை சேர்ந்த தலைஞாயிறு, வாய்மேடு, கரியாப்பட்டினம், வேதாரணியம், வேட்டைக் காரனிருப்பு மற்றும் பெண்கள் போலீஸ் நிலையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மலர்கொடி, சுப்ரியா, கன்னிகா, நாகலெட்சுமி ஆகியோர் தலைமையில் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வந்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கி மகளிர் தின விழாவை கொண்டாடினர்.
மேலும் மகளிரின் சிறப்புகள் பற்றி பேசினார் பின்பு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பெண் காவலருக்கு பரிசுகள் வழங்கபட்டது.