உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், -தியாகரசப்பள்ளி கிராமத்தில் மிக பழமை வாய்ந்த ஸ்ரீகாளியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக்ரஷீத் கலந்து கொண்டார்.
இதில் சாமனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சாமில்பாஷா, மருதாண்டப் பள்ளி ஊராட்சி மன்றதலைவர் சுதாவேணு மற்றும் ஊர்பிரமுகர்கள் சந்திரப்பா, ஸ்ரீராம், சின்னப்பா, ரவி உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.