உள்ளூர் செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்-தேர்த்திருவிழா
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்-தேர்த்திருவிழா 17-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்குகிறது.
அந்தியூர்:
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்-தேர்த்திருவிழா 17-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்குகிறது.
அந்தியூர் பஸ் நிலை யம் அருகே உள்ள பத்ர காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குணடம்- தேர் திருவிழா நடப்பது வழக்கம்.
கொரோனா பரவல் காரண மாக கடந்த 2 ஆண்டு களாக விழா நடத்தப் படாமல் இருந்து வந்தது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பாது காப்பு வழிமுறைகளுடன் குண்டம் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 17-ந் தேதி (வியாழக்கிழமை) பூச்சாட்டு விழாவுடன் பத்ர காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திரு விழா தொடங்குகிறது. இதை தொடர்ந்து 30-ந் தேதி கொடி ஏற்றப்படுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா அடுத்த மாதம் 6-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதில் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குறார்கள்.
இதைதொடர்ந்து 8-ந் தேதி மாலை தேர்த்திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 11-ந் தேதி வரை 4 நாட்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு தேர் நிலையை அடைகிறது.