உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியில் எருது விடும் விழா நடைபெற்றது.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியில் நேற்று 3ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 400&க்கும் மேற்பட்ட எருதுகளை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர்.
எருதுகளை குறிப்பிட்ட தூரம் ஓடவிட்டு, ஸ்டாப் வாட்ச் மூலம் கண்காணித்து, குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடக்கும் எருதுகளின் உரிமையாளர்களுக்கு, முதல் பரிசாக, ஒரு லட்சத்து ஒரு ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரத்து ஒரு ரூபாயும், மூன்றாம் பரிசாக 65 ஆயிரத்து ஒரு ரூபாயும் என மொத்தம் 12 பரிசுகள் வழங்கப்பட்டன. எருது விடும் விழாவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்திருந்தனர். இதையொட்டி பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.