உள்ளூர் செய்திகள்
அனுமதியின்றி மதுபானம் விற்ற 2 பேர் மீது வழக்கு
ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மதுபானம் விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சின்னவளையம் பஸ் நிறுத்தத்தில் 2 பேர் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சின்னவளையம் கிராமம் கிழக்குதெருவை சேர்ந்த ஆனந்த்பாபு வயது 37, ஆமணக்கந்தோண்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்னத்தம்பி வயது 57 ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 80 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.