உள்ளூர் செய்திகள்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொடுமைப்படுத்திய பெண்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொடுமைப்படுத்தியதாக பெண் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த பூபதி என்பவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கணவர் இறந்ததையடுத்து பூபதி கூனம்பட்டியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருடன் வசித்து வந்தார். வீட்டில் இருந்த பூபதியின் மகளுக்கு பாண்டி முருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதனை அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை தடுக்க வேண்டிய தாய் பூபதி கள்ளக்காதலன் ஆதரவாக பேசியுள்ளார். மேலும் பாலியல் தொல்லை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மகளை மிரட்டி உள்ளார்.
இதுகுறித்த புகார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் ஜானகி என்பவருக்கு தொலைபேசி மூலம் வந்தது. உடனே அவர் விசாரணை நடத்தியதில் சிறுமி பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது-.
இதுகுறித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தாய் பூபதி, பாண்டிமுருகனை கைது செய்தனர்.