உள்ளூர் செய்திகள்
ராணுவவீரர் மறைவுக்கு உறவினர்கள் கதறி அழும் காட்சி.

ராணுவ வீரர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்

Published On 2022-03-08 15:36 IST   |   Update On 2022-03-08 15:36:00 IST
துப்பாக்கிச்சூட்டில் பலியான ராணுவ வீரர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு 
இடையே நடைபெற்ற துப்பாக்கி சூடு மோதலில் நாகை மாவட்டம் கீழையூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ராணுவ வீரர் ஞானசேகரன் (வயது 45) சம்பவ இடத்திலேயே பலியானார். 

தகவலறிந்த மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் கதறி அழுதனர். 

ஞானசேகரன் உடலை உடனடியாக சொந்த ஊர் கொண்டு வர வேண்டும் என குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இச்சம்பவத்தால்  அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Similar News