உள்ளூர் செய்திகள்
மனு கொடுக்க வந்த விவசாயிகள்.

மாட்டு வண்டிகளில் வருவதற்கு அனுமதி வழங்க வேண்டும்

Published On 2022-03-07 15:30 IST   |   Update On 2022-03-07 15:30:00 IST
பண்ணாரி கோவில் குண்டம் விழாவுக்கு மாட்டு வண்டிகளில் வருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மனு கொடுத்தனர்.
சத்தியமங்கலம்:

பண்ணாரி கோவில் குண்டம் விழாவுக்கு மாட்டு வண்டிகளில் வருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மனு கொடுத்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஆண்டு தோறும்  நடைபெற்று வருகிறது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 

இந்த நிலையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா இன்று இரவு பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது. வரும் 22&ந் தேதி பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் இறங்கும் திருவிழா நடக் கிறது.

இதில்  ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்து கிறார்கள். விழவை யொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு வந்து குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத் துவார்கள். தொடர்ந்து மாடுகளையும் குண்டம் இறங்க செய்வார்கள்.

இந்த நிலையில் திம்பம் மலைபாதையில் இரவு நேர போக்குவரத்து தடை உள்ளதால் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக குண்டம் திருவிழாவின் போது மாட்டுவண்டிகளில் வர அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சத்திய மங்கலம், பவானிசாகர், கோபி செட்டிபாளையம், புளியம்பட்டி, அன்னூர், சரவணம்பட்டி உள்பட பல்வேறு  பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோபி செட்டிபாளையம் கோட்டாச்சியர் பழனிதேவியிடம் மனு கொடுத்தனர்.

அதில் பண்ணாரியம்மன் கோவில் குண்டம்  விழா வரும் 22&ந் தேதி நடக்கிறது.  விழாவுக்கு பக்தர்கள் மற்றும் விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வருவது வழக்கம்.  

எனவே விழாவுக்கு  மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் விவசாயிகள் வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Similar News