உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய 50 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
புஷ்பவனத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய 50 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் 50&க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான கவுதமன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன், திருமருகல் ஒன்றிய தி.மு.க செயலாளர் செங்குட்டுவன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளரும் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளருமான லோகநாதன், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காந்திமதி லோகநாதன், மீனவர் அணி சேகர், ரமேஷ் குமார் மற்றும் வார்டு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.