உள்ளூர் செய்திகள்
.

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-03-06 15:20 IST   |   Update On 2022-03-06 15:20:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கெங்கி நாய்க்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). இவருக்கு  சுதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 9 ஆண்டுகள்  முன்பு திருமணம் நடைபெற்றது.  குழந்தைகள் இல்லை.

இதனால்  மனமுடைந்த ஆறுமுகம் இரவு குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தார். இதில் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் அதிகாலை இறந்தார். 

இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News