உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான தங்க முத்து.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி பலி

Published On 2022-03-06 15:17 IST   |   Update On 2022-03-06 15:17:00 IST
பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காவலாளி பலியானார்.
பெருந்துறை:

பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காவலாளி பலியானார்.

பெருந்துறை அடுத்த  காஞ்சிகோவில் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்  தங்க முத்து (வயது 47). இவர் பல்ல கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கவலாளியாக வேலை பார்த்து வந்தார்.  இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும் மயில்ராஜ் என்ற மகனும் உள்ளனர்.

இவர் பெருந்துறை குன்னத் தூர் ரோட்டில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில்  இரவு இவர் வேலையை முடிந்து அவருடைய நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பெருந் துறைக்கு வந்தார்.

அவர் துடுப்பதி பைபாஸ் அருகே இறங்கி நடந்து சென்று ரோட்டை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து கோவைக்கு சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் அவர்தலை மற்றும் உடலில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந் தார்.  இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News