உள்ளூர் செய்திகள்
.

பிறந்த 4 நாட்களான பெண் குழந்தை சாவு

Published On 2022-03-06 15:16 IST   |   Update On 2022-03-06 15:16:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பிறந்து 4 நாட்களான பெண் குழந்தை இறந்தது.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்பு குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 31) இவருக்கு ஈஸ்வரி (29) என்ற மனைவியும் 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

 இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈஸ்வரிக்கு கடந்த 3&ந் தேதி சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து மறுநாள் வீட்டிற்கு வந்துள்ளனர். 

இந்த நிலையில் பிறந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். கடும் காய்ச்சலால் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை நேற்று இறந்தது. 

இது குறித்து குழந்தையின் தந்தை பிரபாகரன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News