உள்ளூர் செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட காயத்ரி, மற்றும் குழந்தைகள் கனிஷ்கா, சர்வன்.

2 குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை

Published On 2022-03-06 15:03 IST   |   Update On 2022-03-06 15:03:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் காயத்ரி (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(39). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்குகனிஷ்கா (7) என்ற மகளும், சர்வன் (4) என்ற மகனும் இருந்தனர்.அவர்களில் கனிஷ்கா தனியார் பள்ளி ஒன்றில் 2&ம் வகுப்பு படித்து வந்தாள்.

வெங்கடேசன் திருப்பதியில் தொப்பி வியாபாரம் வருகிறார். பெரும்பாலான நாட்கள் அங்கேயே இருப்பார். அவ்வ போது தனது ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

வெங்கடேசனின் தாய் மாற்றுத்திறனாளியான உதயலட்சுமி (75) மருமகள் காயத்ரியுடன் இருந்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று மதியம் காயத்ரி குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு குழந்தைகளுடன் மாடி அறையில் தூங்க செல்வதாக அழைத்து சென்றார். சிறிது நேரம் கழித்து காயத்ரி மட்டும் கீழே வந்தார்.

பின்னர் அவர் நாற்காலி ஒன்றை எடுத்தபடி மேலே மாடி அறைக்கு சென்றார். இதை கவனித்த மாமியார் உதயலட்சுமி  எதற்காக நாற்காலியை எடுத்து செல்கிறாய் எனகேட்டார். அதற்கு காயத்ரி கயிறு கட்ட வேண்டி உள்ளது என கூறினார். 

இந்தநிலையில் மாடிக்கு சென்ற காயத்ரி மற்றும் குழந்தைகள் நீண்ட நேரமாகியும் கீழே வராததால் உதயலட்சுமி சந்தேகம் அடைந்தார்.

அவர் மேலே சென்று பார்த்த போது மாடியில் விட்டத்தில் குழந்தைகள் 2 பேருடன் காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். 

இதை பார்த்த உதயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அவர் இது குறித்து அக்கம் பக்கத் தினருக்கு தெரிவித்தார். அவர்கள் இது குறித்து மத்தூர்போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர், மத்தூர்போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்ட காயத்ரி மற்றும் குழந்தைகள் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையில் காயத்ரி தனது குழந்தைகள் 2 பேரையும் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்து, பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காயத்ரி தம்பி திவாகர் மற்றும் அவரது தாயும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், அதன் காரணமாக காயத்ரி தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மத்தூர் அருகே குடும்ப தகராறில், 2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News