உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

விபத்தில் விவசாயி பலி

Published On 2022-03-06 14:42 IST   |   Update On 2022-03-06 14:42:00 IST
சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
சிவகிரி:

சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.

சிவகிரி அருகே சடையப்பபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 58) விவசாயி-. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று பெரியசாமி சடையப்பபுரம் அருகே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 

திடீரென செல்வகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெரியசாமியின் மீது  மோதியது. இதில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. செல்வகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

சத்தம் கேட்டு அருகில் இருந்த வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக பெரியசாமி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். செல்வகுமார் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News