உள்ளூர் செய்திகள்
கஞ்சா வழக்கில் 3 வாலிபர்கள் கைது
ஜெயங்கொண்டத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மீன் சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் கஞ்சா இருப்பதாக மீன்சுருட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான காவல்துறையினர் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
சோதனையில் அவர்கள் சுமார் ஒரு 1.100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார், சிற்றரசன், ஆரோக்கியராஜ் என்பதும் விற்பனைக்காக கஞ்சாவை வைத்து இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.