உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் வீட்டிற்குள் பாம்பு புகுந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் வசிப்பவர் சுப்பிரமணியன் வயது65 என்பவரது வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் சமையலறையில் உள்ளே சென்றுள்ளார்.
அப்போது சமையலறையில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து அங்குவந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியுடன் பாம்பை உயிருடன் மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.