உள்ளூர் செய்திகள்
திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி
திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூரில் நடைபெற்ற ஐல்லிக் கட்டுப்போட்டியினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, இந்திய கால்நடை நலவாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 600 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட காளைகள் மற்றும் வீரர்களுக்கு முழுமருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மாடு பிடி வீரர்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாடு மற்றும் மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னு லாப்தீன், மண்டல இணை இயக்குநர் (கால் நடைப் பராமரிப் புத்துறை) மரு.ஹமீதுஅலி, கோட்டாட்சியர் ஏழுமலை, உதவி இயக்குநர் செல்வராஜ், வட்டாட்சியர் ராஜமூர்த்தி மற்றும் சுகாதாரத் துறை மருத்துவ அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.